
ரயில் போக்குவரத்தில் ஜீ.பி.எஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் சீ.பி. ரத்னாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
ரயில் போக்குவரத்தை சிறந்த மற்றும் பாதுகாப்பான சேவையாக மாற்றும் நோக்கிலே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரயில் சேவை முகாமைத்துவத்திற்காக, தொலைபேசி மூலம் தகவல்களைப் பெற்று, கையெழுத்து மூலம் ஆவணப்படுத்தும் முறைமையே சில பகுதிகளில் உள்ளது.
இந்த நிலையில், சில பகுதிகளில் ஜீ.பி.எஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதனூடாக கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சீ.பி. ரத்னாநாயக்க கூறியுள்ளார்.
இதன் ஊடாக ரயில் போக்குவரத்து மூலம் கிடைக்கும் வருமானத்தினை அதிகரித்துக் கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Leave a Reply