
பிரித்தானியா தலைநகர் லண்டனில் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு பேரை கொன்ற நபரின் புகைப்படம் மற்றும் அவன் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
நவம்பர் 29ம் திகதி காலை லண்டன் பிரிட்ஜில் சென்றவர்கள் மீது மர்ம நபர் ஒருவன் கத்தியால் சரமாரியாக குத்தி தாக்குதல் நடத்தினான். மேலும், போலி தற்கொலை வெடிகுண்டு உடையை அணிந்திருந்த மர்ம நபர், இந்த இடத்தை வெடித்து சிதறடிக்கப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளான்.
இதனையடுத்து, பொலிசாருக்கு தகவல் அளிக்க அவர்கள் சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளனர். அதற்கு முன் பொதுமக்களே மர்ம நபரை மடக்கிப்பிடித்துள்ளனர்.
ஆயுதங்களுடன் சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார், தாக்குதலில் ஈடுபட்ட நபரை சுட்டுக்கொன்றுள்ளனர்.
மர்ம நபர் நடத்திய தாக்குதலில் ஆண், பெண் என இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர், 3 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லண்டன் பிரிட்ஜில் நடந்தது தீவிரவாத தாக்குதல் என்பதை உறுதி செய்துள்ள பொலிசார், தாக்குதல்தாரியின் புகைப்படத்துடன் அவன் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளனர்.
உதவி ஆணையர் நீல் பாசு கூறியதாவது, கொல்லப்பட்ட தீவிரவாதி 28 வயதான உஸ்மான் கான் ஸ்டேஃபோர்ஷெயர் பகுதியில் வசித்து வந்துள்ளார்.
இவர் 2012ல் லண்டன் பங்குச் சந்தையில் குண்டு வீச தகர்க்க சதிதிட்டம் திட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஸ்டேஃபோர்ஷெயரில் உள்ள அவரது் வீட்டில் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். தாக்குதல் தொடர்பாக வேறு யாரையும் தீவிரமாக தேடவில்லை.
லண்டன் பிரிட்ஜ் தாக்குதல் தொடர்பில் விசராணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என பொலிசார் தெரிவித்துள்ளனர். அதேசமயம் தைரியமாக மர்ம நபரை மடக்கிப் பிடித்த நபர்களை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
Leave a Reply