
லண்டன் பிரிட்ஜ் தாக்குதல் நடந்த சில மணிநேரத்தில் நெதர்லாந்தில் சரமாரி கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
ஹகுயி நகரத்தில் உள்ள பரபரப்பான ஷப்பிங் தெருவிலே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மர்ம நபர் கத்தியால் குத்தியதில் 3 இளம் வயதினர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மூவரும் வீடு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சம்பவம் குறித்து பொலிசார் அளித்த தகவலின் படி, உள்ளுர் நேரப்படி 19:45 மணிக்கு இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை தீவிரமாக தேடி வருகிறோம். தற்போது வரை யாரும் கைது செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.
மாறுபட்ட ஆதாரங்களை மேற்கோள் காட்டிய தேசிய ஊடகம், தற்போது வரை தாக்குதலுக்கு பயங்கரவாத நோக்கத்திற்கான அறிகுறி எதுவும் இல்லை என தெரிவித்துள்ளது.
தாக்குதலை அடுத்து அங்கிருந்த மக்கள் உயிர் பயத்தில் தெறித்து ஓடியுள்ளனர். தற்போது, அப்பகுதி முழுவதையும் காட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ள பொலிசார், தாக்குதாரியின் அடையாளம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a Reply