
வித்தியா கொலை வழக்கு மற்றும் ஊடகவியலாளர்கள் கொலை மற்றும் துன்புறுத்தல் உட்பட பல முக்கிய விசாரணைகளை மேற்கொண்டு வந்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் பீ.எஸ். திசேரா உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் பிரிவுகள் தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான அறிவிப்பை பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன இன்று வெளியிட்டுள்ளார். பொலிஸ் ஆணைக்குழு மற்றும் தேர்தல் ஆணைக்குழு ஆகியவற்றின் அனுமதியுடன் இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ரத்துபஸ்வலவில் சுத்தமான குடிநீர் கேட்டு ஆர்ப்பாட்டத்தின் நடத்திய மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டமை, ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை, ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டமை, ரிவிர பத்திரிகையின் ஆசிரியர் உபாலி தென்னகோன் தாக்கப்பட்டமை உட்பட பல வழக்கு விசாரணைகளை பீ.எஸ். திசேரா மேற்கொண்டு வந்தார்.
ரத்துபஸ்வல கொலை சம்பவம் தொடர்பான இராணுவத்தின் நான்கு பேருக்கு எதிராக கம்பஹா மேல் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
Leave a Reply