
மாவீரர் நாள் மற்றும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பன இன்று அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா குற்றம் சாட்டினார்.
முல்லைத்தீவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், மாவீரர் நினைவேந்ததலில் யுத்தம் குறித்து அரியாதவர்கள் அரசியல் நோக்கத்திற்காக அதில் கலந்துகொள்வது போல நடந்துகொள்வதாகவும் அதனை ஏற்க முடியாதென்றும் அவர் குறிப்பிட்டார்.
எனவே தமிழர்களின் பிரச்சினைக்கு இந்தியா சிறந்ததொரு தீர்வினை முன்வைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
Leave a Reply