
நாடாளுமன்ற தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஏற்பட்டால் 19வது திருத்தத்தை நீக்கப் போவதாக தெரிவுத்துள்ளார் கோட்டாபய ராஜபக்ச.
இந்து நாளிதழுக்கு வழங்கிய நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார்.
19வது திருத்தத்தினால் நாட்டில் ஸ்திரத்தன்மை இல்லாமல் போகும் என்றும், இதனால் முதலீட்டாளர்கள் வரமாட்டார்கள், வளர்ச்சி இல்லாமல் போகும் என்றும் தெரிவித்தார்.
குடும்பத்தில் உங்களை டெர்மினேட்டர் என்று அழைக்கப்படுவது உண்மையா என செய்தியாளர் கேள்வியெழுப்பியபோது,
(சிரிப்பு) அது உண்மையல்ல. எனது குழந்தைப் பருவத்திலிருந்தே எங்கள் குடும்பத்தில் நான் மிகவும் அப்பாவி நபர்.
நான் இராணுவத்தில் சேர்ந்தபோது, எனது குடும்பத்தினர் மஹிந்த இராணுவத்தில் சேர்ந்திருக்க வேண்டும், நான் அரசியலுக்கு வந்திருக்க வேண்டும் என்றார்கள்.
Leave a Reply