
கோட்டாபய ராஜபக்ச இந்தியாவில் பாதுகாப்பு கல்லூரியில் பயிற்சி பெற்றபோது, அவருடன் சக பயிற்சியாளர்களாக இருந்த 16 நண்பர்கள் நேற்று இந்தியாவில் அவரை சந்தித்து கொண்டனர்.
இந்தியா போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் வி.கே.சிங்கும், பாதுகாப்பு கல்லூரியில் ஒன்றாக கற்கையை மேற்கொண்டவர்.
கோட்டா இந்தியாவிற்கு விஜயம் செய்தபோது, அவரை விமானநிலையத்தில் வி.கே.சிங்கே வரவேற்றார்.
நேற்றிரவு வி.கே.சிங் வழங்கிய விருந்தில் கோட்டாபய ராஜபக்ச கலந்து கொண்டிருந்தார். இதன்போது, மேலும் 15 இந்திய இராணுவத்தின் முன்னாள் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இவர்கள் பாதுகாப்பு பயிற்சி கல்லூரியில் கோட்டாவுடன் கற்கையை மேற்கொண்டவர்கள்.
அத்துடன், இலங்கைக்கு வந்த இந்திய அமைதிப்படையிலும் கடமையாற்றியுள்ளனர்.
Leave a Reply