
தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர் அஜித். இவர் நடிப்பில் இந்த வருடம் விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என இரண்டு படங்கள் வந்தது.
இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது, இந்நிலையில் பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி அவர்களிடம் அஜித்தை வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்றால் எப்படியான படமாக இருக்கும் என கேட்டுள்ளனர்.
அதற்கு சமுத்திரக்கனி ‘எனக்கு அஜித் சாரை மிகவும் பிடிக்கும், நேர்கொண்ட பார்வை பார்த்ததும் இன்னும் பிடித்துவிட்டது.
அவரை வைத்து படமெடுத்தால் கண்டிப்பாக சமுதாயம் சார்ந்த ஒரு கதையாக தான் இருக்கும்’ என கூறியுள்ளார்.
Leave a Reply