மன்னாரில் கடும் மழை- விவசாய நடவடிக்கைகள் பாதிப்பு

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக வட.மாகாணத்தின் இரண்டாவது பெரிய குளமாக காணப்படும் மன்னார் முருங்கன் கட்டுக்கரை குளம் நிரம்பி தற்போது வான் பாய்ந்து வருகின்றது.

இதனால் அப்பகுதியைச் சேர்ந்த பல சிறிய மற்றும் நடுத்தர குளங்களும் நிறைந்து வான் பாய்ந்து வருகின்றது.

இதனால் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டிற்கான காலபோக நெற்செய்கை பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை மன்னாரில் நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய 5 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் சுமார் 200 ஏக்கர் நெற்செய்கை பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வயல் நிலங்களில் மழை நீர் தேங்கி காணப்படுவதினால் முளைத்த நெற் பயிர்கள் அழிவடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

அத்துடன்  கால்நடை வளர்ப்பாளர்களும் கால் நடைகளை மேய்ச்சல் நிலங்களில் வைத்து பராமரிக்க பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *