வடமாகாண ஆளுநா் பதவியிழந்த நிலையில் ஆளுநா் செயலக வாகனம் தனியாா் பயன்பாட்டில்..! எப்படி என கேள்வி..?

வடமாகாண ஆளுநா் பதவி விலகியிருக்கும் நிலையில் ஆளுநா் செயலக வாகனம் தனியாாின் பாவனையில் உள்ளமை எவ்வாறு? என வடமாகாணசபை முன்னாள் எதிா்கட்சி தலைவா் சி.தவ ராசா கேள்வி எழுப்பியிருக்கின்றாா். 

ஆளுநர் செயலகத்தின் பயன்பாட்டில் இருக்கும் வாகனம் ஆளுநர் எவருமே அற்ற நிலையில் முன் னாள் ஆளுநர் ஒருவரின் தனிப்பட்ட பணியாளர் கொழும்பிற்கு எடுத்துச் சென்றுள்ளார். சகல மாகாணத்தின் ஆளுநர்களும் 20ம் திகதி முதல் பதவில் இல்லை. 

அவ்வாறு ஆளுநர்கள் பதவி இழந்த நிலையில் அவா்களின் தனிப்பட்ட ஊழியர்கள் பணி இழந்து சாதாரண ஓர் குடிமகனாகவுள்ள நிலையில் நேற்றைய தினம் ஆளுநர் செயலகத்தில் இருந்து ஓர் வாகனத்தை கொழும்பிற்கு எடுத்துச் சென்றுள்ளார்.

இவ்வாறு எடுத்துச் சென்றமை முற்றிலும் முரணான ஓர் செயல் அத்தோடு ஓர் தனி மனிதனிடம் அரச செயலகத்திற்குச் சொந்தமான வாகனத்தை கையளித்தமை செயலாளரின் நிர்வாகத் திறன் இன்மையினை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.

எனவே மாகாண கணக்காய்வுத் திணைக்களம் உடன் கவனத்தில்கொள்ள வேண்டும். அதேநேரம் குறித்த விடயம் தொடர்பில் ஆளுநரின் செயலாளர் பூரண விளக்கம் பகிரங்கப்படுத்த வேண்டும். என்றார். இது தொடர்பில் ஆளுநரின் செயலாளர் 

எஸ்.சத்தியசீலனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது , ஆளுநர் செயலகத்தின் வாகனத்தை கொண்டு சென்றது உண்மை ஆனால் அது ஓர் தனியாள் அல்ல அவரே தற்போதைய வடக்கு மாகாண பயணிகள் போக்கு வரத்து அதிகார சபையின் தலைவரும் ஆவார். 

அவ்வாறு வகிக்கும் வடக்கு மாகாண பயணிகள் போக்கு வரத்து அதிகார சபையின் தலைவர் பதவி காலத்தில் குறித்த வாகனத்தை பயன்படுத்துவதற்கான எழுத்து மூலமான அனுமதியை பெற்றுள்ளார் எனத் தெரிவித்தார். 


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *