
அடிலெய்டில் நடந்து வரும் பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டியிலேயே, பாகிஸ்தான் வீரர் ஒருவர் 400 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை அள்ளியுள்ளார்.
வார்னரின் முச்சதம், லாபுசாங்கேயின் சதம் ஆகியவற்றால் அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 589 ஓட்டங்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.
தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணி 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 96 ஓட்டங்கள் சேர்த்துள்ளது.
இந்த டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் யாசிர் ஷா அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
32 ஓவர்கள் வீசிய யாசிர் ஷா ஒரு மெய்டன் எடுத்து, 197 ஓட்டங்களை தாராளமாக வழங்கியுள்ளார். ஒரு விக்கெட்டைக்கூட கைப்பற்றவில்லை. அவுஸ்திரேலிய அணி சேர்த்த ஓட்டங்களில் மூன்றில் ஒருபகுதி ஓட்டங்களை யாசிர் ஷா மட்டுமே வழங்கியுள்ளார்.

இந்தப் போட்டியில் முச்சதம் அடித்த டேவிட் வார்னர் மட்டும் யாசிர் ஷா பந்துவீச்சில் 111 ஓட்டங்களை விளாசியுள்ளார்.
பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியிலிருந்தே யாசிர் ஷாவின் மோசமான பந்துவீச்சும், ஓட்டங்களை வாரி வழங்குதலும் தொடர்ந்து வருகிறது.
முதல் டெஸ்டில் ஏறக்குறைய 48.4 ஓவர்கள் வீசிய யாசிர் ஷா 205 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இரு டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து 80.4 ஓவர்கள் வீசிய யாசிர் ஷா 402 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளார்.
யாசிர் ஷாவின் பந்துவீச்சு சராசரி இந்த தொடரில் 100.5 என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply