ஈழத்தமிழர்களுக்கு தமிழீழம் தீர்வாக இருக்க முடியாது – கே.எஸ்.அழகிரி

ஈழத்தமிழர்களுக்கு தமிழீழம் தீர்வாக இருக்க முடியாது தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது முதலாவது வெளிநாட்டு விஜயமாக இந்தியாவிற்கு சென்றிருந்தார். இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள கே.எஸ். அழகிரி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்த அவர், இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராகவுள்ள இரா.சம்பந்தன், மற்றும் வடமாகாணத்தின் முன்னாள் முதல்வரான சி.வி.விக்னேஷ்வரன் ஆகியோர் கோட்டாபய ராஜபக்ஷவின் அணுகுமுறையால் எந்த பாதிப்பும்  ஏற்படாமல் பாதுகாக்க வேண்டியதன் பொறுப்பு இந்திய அரசுக்கு இருப்பதாக கருதுகிறார்கள்.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் இல்லாமல் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றுள்ளமையே இந்த அச்சத்திற்கு காரணமாகும்.

இலங்கை தமிழர்களுக்கு முழுமையான அதிகாரப்பகிர்வு என்ற ஒற்றை இலட்சியம் அவர்களின் நோக்கமாக இருக்கிறது. அதை நோக்கியே அவர்கள் பயணிக்கின்றார்கள்.

இந்தியாவுக்குள் தமிழகம் இருப்பதைப்போல அதிக அதிகாரங்களுடன் ஒரு மாநிலம் அமைவதே இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர தீர்வாக இருக்க முடியும்.  அதனையே தமிழர்களும் விரும்புகின்றனர். மாறாக தமிழீழம் என்பது தீர்வாக இருக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *