
தேர்வாளர்களை குறை சொல்ல வேண்டுமென்றால் நேரிடையாக பேசவேண்டுமென்றும் அதற்காக தன்னுடைய மனைவி அனுஷ்காவின் பெயரை எதற்காக பயன்படுத்த வேண்டும் என்றும் விராட் கோஹ்லி கேள்வியெழுப்பியுள்ளார்.
உலகக்கோப்பை போட்டியில் வீரர்கள் குறித்து கவலை கொள்ளாமல் எம்எஸ்கே பிரசாத் தலைமையிலான தேர்வாளர்கள் நடிகையும் விராட் கோஹ்லியின் மனைவியுமான அனுஷ்கா ஷர்மாவுக்கு டீ கொடுத்து உபசரித்துக் கொண்டிருந்ததாக முன்னாள் விக்கெட் கீப்பர் பரோக் இன்ஜினியர் குற்றம் சாட்டியிருந்தார்.
எம்எஸ்கே பிரசாத் மற்றும் அனுஷ்கா குறித்த பரோக் இன்ஜினீயரின் இந்த விமர்சனம் செய்யப்பட்டு ஒரு மாதம் கடந்த நிலையில், தற்போது இந்த பேச்சு குறித்து கோஹ்லி தன்னுடைய மவுனத்தை கலைத்துள்ளார்.
தேர்வாளர்கள் குறித்து குறை சொல்ல வேண்டுமென்றால் நேரிடையாக பேச வேண்டும் அதை விடுத்து பிரபலமான நடிகையாக உள்ள தன்னுடைய மனைவியின் பெயரை அதில் ஏன் நுழைக்க வேண்டும் என்று கோஹ்லி கேள்வி எழுப்பியுள்ளார்.
அனுஷ்கா போன்ற பிரபலமான நடிகையின் பெயரை பயன்படுத்தினால், அந்த விடயம் எளிதாக மற்றவர்களை சென்று சேர்ந்துவிடும் என்பதற்காக அவரது பெயரை முன்னாள் விக்கெட் கீப்பர் பயன்படுத்தியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் எந்த இடத்திற்கு சென்றாலும் விதிமுறைகளை கடைபிடிப்பவர் அனுஷ்கா என்று விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.
Leave a Reply