
புடலம்பிஞ்சு, அவரைப்பிஞ்சு, வாழைப்பூ, வெண்டைக்காய் வாழைக்கச்சல், மாவடு, சேனை, கருணை, உருளைக்கிழங்கு, பாலபிஞ்சு, சிறுகீரை, அரைக்கீரை, மணத்தக்காளி, வெந்தயக்கீரை, பொன்னாங்கண்ணி, முளைக்கீரை, எலுமிச்சம்பழம், புளியாரை வேப்பம்பூ, கடுகு, பச்சைக் கொத்துமல்லி, துவரம் பருப்பு, பாதாம் பருப்பு, பச்சைப்பயறு, முந்திரிபருப்பு,மாம்பிஞ்சு, களாக்காய், நெல்லிக்காய், கச்ச நார்த்தங்காய், இஞ்சி, சுக்கு தட்டிப்போட்டுக் காய்ச்சிய அரிசிகஞ்சி, பாற்கஞ்சி, நெற்கஞ்சி, பாயாசம், மிளகு முதலியவை சேர்த்துச்செய்த தோசை, இட்டிலி, லட்டு, ஹல்வா, நல்ல கெட்டித் தேன், புதிய பசுநெய் அதிமதுரம், கரும்பு உள்ளிப்பூண்டு, முதலியன..
இலவங்கப்பட்டை மட்டும் ஏழாம் மாதத்திற்குப் பிறகு பிரசவிக்கும்வரை உபயோகிக்கலாம், மிகப் புளிப்பும், கசப்பும் காரமும், உவர்ப்புமுள்ள பாதார்த்தங்களை அதிகம் சேர்த்தல் கூடாது அஜீரணத்தை உண்டு பண்ணக்கூடியதும், அதிக நேரஞ்சென்ற பின்னர் ஜீரணமாகத்தகது, சூதக விருத்தி, மலபேடு ஜலபேதி முதலியவற்றை உண்டுபண்ணத்தக்கதுமாகிய பதார்த்தங்களை உண்ணுதல் கூடாது பால், சக்கரை, லேசான உப்புப்போட்டுப் பக்குவஞ் செய்த தின்பண்டங்கள், இன்னும் எளிதில் ஜீரணமாகத்தக்க வஸ்துக்கள் இவைகளைக் கர்பிணி சாப்பிடலாம் பழய வஸ்த்துக்களையும் வேகமலே அல்லது தீய்ந்தோ உள்ள வஸ்த்துக்களைக் கர்ப்பிணி அருந்தலாகாது.
வெங்காயந் தின்றுவந்தால் குழந்தை அதிக விஷமம்செய்யும் கர்ப்பிணி அதிகமாய்த் தூங்காமலும், ஆனால், மிதமான நித்திரை, செய்துகொண்டும் நல்லவிஷயங்களையே நினைத்துக்கொண்டும், விசனத்திற்குச் சிறிதும் இடங்கொடாமல் மனத்திற்கு நல்ல ஊக்கத்தையும், தைரியத்தையும், சாந்தத்தையும்கொடுத்து புத்தியை விஸ்தாரப்படுத்தி, அறிவையும் ஆனந்தத்தையும் விளைவிக்கும் அருமையான புஸ்தகங்களைப் படிக்கவேண்டும் தான் விரும்பிய உணவுகளைக் கர்ப்பிணி உண்டு களிப்போடு இருக்கவேண்டும்.
நிலக்கடலை கொள்ளு, மொச்சை, பெரும்பயறு முதலிய வஸ்த்துக்களையும் அருந்தக்கூடாது குரூபிகளோடு அதிகமாகப் பழகாமலும் இருக்கவேண்டும் இங்கு புகன்ற உணவுகளையுட்கொண்டு வந்தால் கர்ப்பிணி நல்ல ஆரோக்கியம்பெற்று, அழகுள்ள குழைந்தையைச் சுகமே பிரசவிக்கலாம்
Leave a Reply