
சவுதி அரேபியாவின் எல்லைக்கு அருகே அந்நாட்டு ராணுவ ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாக கூறியிருந்த ஏமனின் ஹவுத்தி போராளிகள் குழு, தற்போது அதை நிரூபிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளது.
கடந்த நவம்பர் 29ம் திகதி சவுதியின் தென்மேற்கில் உள்ள அசிர் பகுதியில் அந்நாட்டிற்கு சொந்தமான ராணுவ அப்பாச்சி ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாகவும், அதன் இரண்டு விமானிகளும் கொல்லப்பட்டதாகவும் ஏமனின் ஹவுத்தி போராளிகள் குழு தெரிவித்திருந்தது.
நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஏமனில் ஹவுத்தி குழுவுடன் போராடி வரும் சவுதி தலைமையிலான கூட்டுப்படை தரப்பில் இருந்து தற்போது வரை இத்தாக்குதலை உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில், தாக்குதலை உறுதிப்படுத்தும் வகையில், ஹவுத்தி போராளிகள் குழு ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்ட காட்சியை வெளியிட்டுள்ளது.
அதில், ஹெலிகாப்டர் பறந்துக்கொண்டிருக்கும் போது திடீரென தாக்கப்பட்டு தீப்பிடித்து எரித்து தரையில் விழுந்து நொறுங்குகிறது.
Leave a Reply