
தமிழகத்தில் உள்ளூராட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்படவுள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி இன்று காலை ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தமிழகத்தில் உள்ளூராட்சி தேர்தல் திகதி அட்டவணையை வெளியிட்டார்.
அதன்படி தமிழகத்தில் 2 கட்டங்களாக உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படவுள்ளது. டிசம்பர் 27 மற்றும் 30ஆம் திகதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுமென தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வேட்புமனு தாக்கல் டிசம்பர் 6ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள் டிசம்பர் 13 என்றும் வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான இறுதி நாள் டிசம்பர் 18ம் திகதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜனவரி 2ஆம் திகதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது
Leave a Reply