
பாராளுமன்ற அமர்வுகள் இன்று நள்ளிரவுடன் ஒத்திவைக்கப்படுமென அறியமுடிகின்றது.
புதிய ஜனாதிபதி பதவியேற்ற கையோடு பாராளுமன்றத்தின் புதிய அமர்வுகள் ஜனாதிபதியின் அக்கிராசன உரையுடன் ஆரம்பிக்கவேண்டிய சம்பிரதாயம் இருப்பதால் பாராளுமன்றம் இவ்வாறு ஒத்திவைக்கப்படுவதாக தெரிகிறது.
இதன்படி இரண்டு வாரங்கள்வரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படுமென தெரிகிறது.
முன்னதாக பாராளுமன்றம் நாளை கூடவிருந்தது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply