
வடக்கில் சட்டத்தையும் ஒழுங்கையும் நடைமுறைப்படுத்துவதற்கு பொதுமக்கள் பொலிசாருடன் இணைந்து செயற்பட வேண்டுமென யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக இன்றைய தினம் தனது கடமைகளை பொறுப்பேற்ற மகேஷ் ரத்நாயக்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இதனை கூறியுள்ளார்.
அத்துடன் வடக்கில் இன்றைய தினம் நான் பிரதிப் பொலிஸ்மா அதிபராக எனது கடமைகளை பொறுப்பேற்றுள்ள நிலையில் வடக்கில் சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்த தன்னாலான முயற்சிகளை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டும் அல்லாமல் பொலிசாருக்கும் மக்களுக்கும் இடையிலான நல்லுறவை ஏற்படுத்துவதற்கு தான் முழுமையாக முயற்சிப்பேன் எனக்கூறிய அவர், வடக்கில் பணியாற்றும் பொலிசாருக்கு உள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் நான் பூரணமாக ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சட்டத்தையும் ஒழுங்கையும் நடைமுறைப்படுத்துவதற்கு பொதுமக்களும் பொலிசாருக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டுமெனவும் அதற்கானை அழைப்பினை தான் பொதுமக்களிற்கு விடுப்பதாகவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply