
இந்தியாவுக்கு தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டபோது ஸ்ரீலங்கன் விமானசேவை நிறுவனம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவுக்கு அளித்த விருந்தோம்பலுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதி தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
அதில்,
இலங்கையின் முறைபடி அளிக்கப்பட்ட விருந்தோம்பலுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்க்கு நன்றிகள். இலங்கையின் கொடியை ஏந்திச் செல்லும் நமது தேசிய அடையாளமானது நம் நாட்டை மீண்டும் பெருமைப்படுத்தி பெயர் வாங்க செய்யும் என நம்புகின்றேன்.’ என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கையின் ஜனாதிபதியாகப் பதவி பிரமாணம் செய்த பின்னர், கோட்டாபய ராஜபக்ஷ தனது முதலாவது விஜத்தை இந்தியாவிற்கு மேற்கொண்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் நாடு திரும்பியமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply