
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில், இன்றும் நான்கு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று அதிகாலை முதலே குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மண்சரிவு ஏற்பட்டதில் அதில் சிக்கி உயிருக்கு போராடிய ஆறு பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
குன்னூர் வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த ஜீலியட் என்பவர் நடந்து சென்று கொண்டிருந்த போது மண்சரிவில் சிக்கி புதையுண்டார்.
இதை ஆட்டோ ஓட்டுநர்கள் பார்த்ததும் உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் அளிக்க, விரைந்து வந்த அதிகாரிகள் ஜீலியட்டை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதேபோன்று பென்ட்ஹில் பகுதியில் வீட்டில் சமைத்துக் கொண்டிருந்த ரேவதி மற்றும் நான்கு குழந்தைகள் மண்சரிவால் ஏற்பட்ட சமையல் அரையின் கூரை சரிந்ததில் சிக்கிக் கொண்டனர்.
இதனை தொடர்ந்து பலமணிநேரம் போராடிய மீட்புப்படையினர் ஐந்து பேரை உயிருடன் மீட்டனர்.
Leave a Reply