
இலங்கையின் உள்நாட்டுப் போர் 10 ஆண்டுகளுக்கு முன்பு முடிவடைந்தது, ஆனால் போரின் போதும் அதற்குப் பின்னரும் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதில் தற்போது வரை சிறிதளவு முன்னேற்றம் ஏற்படவில்லை என உறவினர்கள் துயரத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
காணாமல் போன தங்கள் குழந்தைகள் தொடர்பில் செய்தி வரும் என பல குடும்பங்கள் காத்திருக்கின்றன. சுமார் 20,000 பேர், பெரும்பாலும் தமிழர்கள், இன்னும் காணவில்லை என்று கருதப்படுகிறது.
பலர் தங்கள் உறவினர்கள் உயிருடன் இருக்கிறார்கள் மற்றும் பாதுகாப்பு படையினரின் பிடியில் இருப்பதாக நம்புகிறார்கள். எனினும், இலங்கை அரசாங்கம் அதை நிராகரித்துள்ளது.
ஆர்ப்பாட்டம் செய்வதற்கும் உறவினர்களின் நினைவுகளை உயிரோடு வைத்திருப்பதற்கும், காணாமல் போனவர்களின் குடும்பங்கள் தினசரி சந்தித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.
பலர் இப்போது இலங்கையின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்றுள்ளதால் அஞ்சுகிறார்கள். மேலும், நாட்டின் எதிர்காலம் குறித்து கவலை தெரிவித்துள்ளனர். ராஜபக்ஷ வம்சத்தின் வருகை விமர்சகர்கள் மீது ஒரு புதிய ஒடுக்குமுறையைத் தூண்டக்கூடும் என்றும் பலர் அஞ்சுகின்றனர்.
ராஜபக்ஷ எந்தவொரு தவறான செயலையும் செய்யவில்லை என்று மறுக்கிறார் மற்றும் இரு தரப்பினரும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
காணாமல் போனவர்கள் தொடர்பிலான பதில்களுக்காக இன்னும் காத்திருக்கும் கிளிநொச்சியை சேர்ந்த கனகசபை இரத்தினசிங்கம் கூறியதாவது, என் மகன் காணாமல் போய் 13 வருடங்கள் முடிந்துவிட்டது, இன்னும் ஒரு பதிலும் இல்லை, ஒரு முடிவும் இல்லை.
எனக்கு இங்கு இருக்கனும் என்று தான் ஆசை, இங்கு வந்தால் தான் எனக்கு நிம்மதி. என்னுடைய மகனுடைய சிந்தனையிலே காலையிலே வந்துவிடுவேன்.
எங்களுக்கு நம்பிக்கை இல்லை எங்களுடைய பிள்ளகைள் வருமென்று, கோட்டாபய மற்றும் இந்த அரசாங்கத்தின் ஆட்டுழியத்தை உலக நாடுகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று தான் நானே செலவழித்து இங்கு வந்து செல்கிறேன் என துயரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
Leave a Reply