
விஷால் நடித்த ஆம்பள படம் நன்றாக ஓடினாலும் சில காட்சிகள் அதிகமாக கிண்டலுக்கு ஆளாகின. கார் மேலே பறக்கும் காட்சிகள் இப்போதும் மீம்ஸ் கிரியேட் செய்வோர்களுக்கு ஒரு வரம்.
இந்த காட்சி குறித்து முதன்முறையாக பேட்டி கொடுத்துள்ளார் இயக்குனர் சுந்தர்.சி. அதில் அவர், நான் செய்தது ஒரு ஸ்பூஃப் தான், எத்தனையோ படங்களில் ஜீப் எல்லாம் பறக்கும்.
அதை வைத்து காமெடிதான் பண்ணினேன். அதை சீரியஸாக எடுத்துக் கொண்டு கிண்டல் செய்தார்கள். ஆம்பளபடமே ஸ்பூஃப் தான், ஒருவேளை அப்படிபட்ட படம் என்று மக்கள் புரிந்து கொள்ளாத அளவிற்கு படம் எடுத்துவிட்டு தவறு செய்துவிட்டோமோ என்று யோசிப்பேன் என பேட்டி கொடுத்துள்ளார்.
Leave a Reply