
நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக 4153 குடும்பங்களை சேர்ந்த 14,164 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இறுதியாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த அனர்த்தங்களில் சிக்கி இதுவைரையில் 5பேர் உயிரிழந்துள்ளதோடு 5 பேர் காயமடைந்துள்ளனரென அந்த நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
அத்தோடு இந்த அனர்த்தங்களில் சிக்கி ஒருவர் காணாமல்போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 6 வீடுகள் முழுமையாகவும் 859 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் நாட்டை சூழலுள்ள வளிமண்டலத்தின் காற்று மண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழுப்ப நிலை காரணமாக வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் எதிர்வரும் நாட்களில் அதிகளவான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
Leave a Reply