சுவிஸ் தூதரக ஊழியர் விவகாரம் : கடத்தப்பட்ட பெண்ணிற்கு வெளிநாடு செல்ல தடை

கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சுவிஸ் தூதரக ஊழியர் டிசம்பர் 9 ஆம் திகதி வரை நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக குற்றவியல் புலனாய்வு பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து கொழும்பு தலைமை நீதவான் லங்கா ஜெயரத்ன பயண தடை விதித்து உத்தரவிட்டார்.

கடந்த திங்கட்கிழமை நடந்ததாகக் கூறப்படும் இந்த கடத்தல் சமபவம் தொடர்பாக சுவிஸ் தூதரக ஊழியர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் சி.ஐ.டி. இந்த சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் தூதரக ஊழியரிடமிருந்து ஒரு வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டியிருப்பதால் பயணத் தடையை விதிக்குமாறு சி.ஐ.டி. கோரிக்கை விடுத்திருந்தது.

சுவிஸ் தூதரகம் மற்றும் சுவிஸ் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சு ஆகியவை அந்த ஊழியரின் உடல்நிலையை சுட்டிக்காட்டி சாட்சியங்களை வழங்க மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *