பிரித்தானிய மகாராணி மரணம்! தீயாய் பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த புகைப்படம்

பிரித்தானிய மகாராணியார் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக சமூக ஊடகம் ஒன்றில் செய்தி பரப்பப்பட்ட நிலையில், வெளியான புகைப்படம் ஒன்று அதை வதந்தி என நிரூபித்துள்ளது.

ட்விட்டரில் நண்பர்கள் குழு ஒன்று தங்களுக்குள் மகாராணியார் இறந்து விட்டதாகவும், அவரது மரணம் காலையில் முறைப்படி அறிவிக்கப்படும் என்றும், அவரது நினைவாக மக்கள் ஆங்கிலக் கால்வாயில் நீந்த தயாராகுமாறும் செய்தி பறிமாறிக்கொண்ட விடயம் #Queendead என்ற ஹாச்டேக்குடன் ட்ரெண்டானது.

ஏற்கனவே லண்டன் பிரிட்ஜில் ஒரு அசம்பாவிதம் நடந்ததைக் குறித்துக்கூட அறியாமல், இப்படி ஒரு கூட்டம் வதந்தி பரப்புவதை ஏராளமான மக்கள் கேலி செய்தனர்.

பலர் இப்படி மகாராணியாரைக் குறித்து வதந்திகள் பரப்புவதற்கு கண்டனம் தெரிவித்தனர்.

இதற்கிடையில் விண்ட்சர் மாளிகையிலிருந்து பக்கிங்காம் அரண்மனைக்கு மகாராணியார் வழக்கம் போல் புறப்பட, அந்த புகைப்படம் வெளியானதும், அவரைக் குறித்து வெளியானசெய்தி வதந்திதான் என்பது நிரூபணமானது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *