
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மல்வத்து- மற்றும் அஸ்கிரிய மகாநாயக்கத் தேரர்களை சந்தித்து விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டார்.
இலங்கையின் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் மகாநாயகக்கத் தேரர்களுடனான முதலாவது சந்திப்பாகவே இன்றைய (செவ்வாய்க்கிழமை) சந்திப்பு அமைந்திருந்தது.
ஆரம்பத்தில் மல்வத்து மகாநாயகக்கத் தேரரரை சந்தித்த முன்னாள் பிரதமரான ரணில் விக்ரமசிங்க, அதனைத் தொடர்ந்து அஸ்கிரிய விகாரைக்குச் சென்று விகாராதிபதியை சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது, தங்களது ஆட்சிக் காலத்தில் மகாநாயக்கத் தேரர்கள் வழங்கிய ஒத்துழைப்புக்களுக்கு முன்னாள் பிரதமர் நன்றிகளைத் தெரிவித்தாரென கூறப்படுகிறது.
மேலும், இந்த சந்திப்புக்களின்போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவி தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அந்தவகையில். எதிர்வரும் சில நாட்களுக்குள் ஐக்கிய தேசியக் கட்சியில் மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக அந்தக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இங்கு கருத்து வெளியிட்டார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சில நிமிடங்கள்வரை நடைபெற்ற இந்த சந்திப்பிற்கு ஊடகங்கள் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply