யாழில் சீரற்றகாலநிலை- இடிந்து வீழ்ந்த ஆலய மடம்!

யாழ் குடாநாட்டில் பெய்துவரும் அடைமழை காரணமாக கோண்டாவில் ஆசிமட அரசடி விநாயகர் ஆலயத்தின் முன்பாக இருந்த பழமை வாய்ந்த மடம் இடிந்து வீழ்ந்துள்ளது.

நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாகவே குறித்த மடம் இடிந்து வீழ்ந்துள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஆலய மடமானது பல வருடங்களுக்கு முன்னர் ஆலயத்திற்கு வருபவர்கள், அப்பகுதியில் உள்ளவர்கள் மற்றும் வீதியால் சென்று வருபவர்கள் இளைப்பாறுவதற்கான அமைக்கப்பட்டிருந்தது.

இந்த மடத்தினை ஆலய நிர்வாகம் தொடர்ந்து உரிய முறையில் பராமரித்து வந்திருந்த போதும், குடாநாட்டில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடர்ச்சியான மழையால் ஆலயமடம் இடிந்து வீழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *