விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

நவீன தொழில்நுட்பத்தின் உடவியுடன் சேனா படைப்புழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் விவசாய திணைக்களம் ஈடுபட்டு வருகின்றது.

உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் அனுசரணையுடன் இந்த வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பல்வேறு பிரதேசங்களிலும் உள்ள சேனா படைப்புழுக்களினை இனங்காணும் நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

படைப்புழு தாக்கம் காரணமாக விவசாயிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

வவுனியா மாவட்டத்தில் மாத்திரம் 500 ஏக்கரில் சோளப்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் 100 ஏக்கரில் படைப்புழு முற்றாக தாக்கியுள்ளதாக வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் சகிலாபானு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *