
நாட்டில் தங்கியிருந்த வௌிநாட்டவர்கள் 21 பேர் வெல்லம்பிட்டிய பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெல்லம்பிட்டியவில் இன்று அதிகாலை நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் இந்தியர்கள் 19 பேரும் பங்களாதேஷ் பிரஜைகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான வெளிநாட்டவர்கள் விசா விதிமுறைகளை மீறி நாட்டில் தங்யிருந்ததாக கூறப்படுகின்றது.
விசா காலம் நிறைவடைந்த நிலையில், அவர்கள் வெல்லம்பிட்டிய பகுதியில் கட்டட நிர்மாணப்பணியில் பணிபுரிந்துள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் கயான் மிலிந்த தெரிவித்துள்ளார்.
கைதானவர்கள் 25 முதல் 40 வயதிற்கு இடைப்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் கைது செய்யப்பட்ட வௌிநாட்டவர்கள் மிரிஹான குற்றத்தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
Leave a Reply