
வீட்டை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்த கரடி, வயதான நபரின் ஒரு கை, கால் தவிர வேறு எதையும் மிச்சம் வைக்காமல் அவருடைய நாயுடன் சேர்த்து சாப்பிட்டுள்ளது.
ரஷ்யாவில் சைபீரியாவின் இர்குட்ஸ்க் பகுதியை சேர்ந்த 66 வயதான செர்ஜி ஃபதேயேவ் என்கிற, ஒதுக்குபுறமாக அமைந்திருக்கும் தன்னுடைய வீட்டில் ஒரு நாயுடன் மட்டும் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நள்ளிரவு நேரத்தில் அவர் உறங்கிக்கொண்டிருக்கும் போது பழுப்பு நிறத்திலான ஒரு கரடி வீட்டின் ஜன்னலை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்துள்ளது.

சத்தம் கேட்டு ஓடிவந்த வேட்டைக்காரர்கள், சாப்பிட்டுவிட்டு காட்டிற்குள் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த கரடியை சுட்டு வீழ்த்தினர். வீட்டிற்குள் சென்று பார்த்த போது, அந்த வயதான நபரின் ஒரு கை மற்றும் கால் மட்டுமே கிடந்துள்ளது.
அவரது நாயுடன் சேர்த்து மற்ற உடல் பாகங்கள் அனைத்தையும் சாப்பிட்டிருப்பது தெரியவந்தது.

இந்த நிலையில் சம்பவம் அறிந்து வந்த பொலிஸார், அருகாமையில் வசிக்கும் மக்கள் அனைவரையும் எச்சரித்துள்ளனர். குழந்தைகள் யாரையும் வெளியில் விட வேண்டாம் என்றும் கூறியுள்ளனர்.
இந்த சம்பவமானது நடந்து இரண்டு நாட்களுக்கு மேல் ஆகியிருக்கும் நிலையில், அப்பகுதியில் வசிப்பவர்கள் பயத்தில் உறைந்துபோய் இருக்கின்றனர்.

Leave a Reply