
வவுனியா செட்டிகுளத்தில், காட்டு யானைகள் விவசாய நிலங்களை சேதமாக்கியுள்ளமையால், தங்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
வவுனியா செட்டிகுளத்தில், தினமும் விவசாய நிலங்களுக்குள் நுழையும் யானைகளினால் தங்களின் விவசாய நிலங்கள் அழிவடைந்து வருவதாகவும் இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால், சுமார் 60 ஏக்கர் வரையிலான உழுந்து பயிர்ச்செய்கை அழிவடைந்துள்ள நிலையில் பல ஏக்கர் நெல் பயிர்ச்செய்கையும் அழிவடைந்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
அரசடிகுளம், மதவு வைத்த குளம், பாவக்குளம், பெரிய புளியாலங்குளம் ஆகிய கிராம விவசாயிகளே காட்டு யானைகளினால் அதிகளவில் பாதிப்புக்குள்ளாகி தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்று(செவ்வாய்கிழமை) இரவும் யானைகள் விவசாய நிலங்கள் மற்றும் குடிமனைகளுக்குள் புகுந்தமையினால் உழுந்து பயிர்ச்செய்கைகள் மற்றும் நெல் பயிர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply