
கிளிநொச்சியில் தொடர்ந்து பெய்து வருகின்ற தொடர் மழை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் சந்தித்துள்ளார்.
அத்துடன் கிளிநொச்சியில் பாதிப்புக்குள்ளான பரந்தன், சிவபுரம், ஆணையிறவு, தட்டுவன்கொட்டி, கட்டைக்காடு ஆகிய பகுதிகளையும் சி.சிறீதரன் இன்று நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
தருமபுரம், கட்டைக்காடு பகுதியில் வெள்ளம் காரணமாக கட்டைக்காடு அ.த.க.பாடசாலையில் 4 குடும்பங்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் சுகாதாரத் தேவைகள், உணவுத் தேவைகள் மற்றும் ஏனைய தேவைகள் தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டறிந்து கொண்டார்.
அத்துடன் பிரதேச செயலாளருடன் மக்களின் உடனடித்தேவைகள் தொடர்பாகவும் கலந்துரையாடலினை மேற்கொண்டிருந்தார்.
குறித்த இடங்களின் வீதிகளினூடாக வெள்ளம் காரணமாக போக்குவரத்து செய்வதிலும் பாரிய இடர்பாடுகளை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினருடன் பெரியகுளம் கிராம அலுவலர சங்கர் தமிழரசுக் கட்சியின் பிரதேச அமைப்பாளர்களான விநாயககுமார்(றஞ்சன்), சிவேந்திரன் ஐங்கரன் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் விக்டர் சாந்தி, பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், கிராமங்களின் மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.






Leave a Reply