
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சில செயற்பாடுகள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
அத்தோடு தேசிய இனப்பிரச்சினையையும் அவர் தீர்ப்பாராகவிருந்தால், நிலையான ஜனாதிபதியாக அவர் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதென்றும் அவர் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. மக்களின் நலனுக்காக அவர்களுடன் இணைந்து பயணிக்க தயாராகவுள்ளோம். சரணாகதி அடைவதாக கூறவில்லை. சராசரி நிலையில் இருந்துகொண்டு செயற்படுவதற்கு தயாராகவுள்ளோம்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சில செயற்பாடுகள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது.
குறிப்பாக தேர்தல் வெற்றியை கண்ணியமாக கொண்டாடுமாறு கூறியமை, பாதுகாப்பு அதிகாரிகளை குறைத்தமை உள்ளிட்ட பல விடயங்கள் வரவேற்கக்கூடியவை.
இதேபோல தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பாராகவிருந்தால், நிலையான ஜனாதிபதியாக அவர் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது” என மேலும் தெரிவித்தார்.
Leave a Reply