
பரமசிவனே தன்னை நேரடியாக காப்பாற்றி வருவதாக தெரிவித்துள்ளார் நித்தியானந்தா.
குழந்தைகள் கடத்தல் புகார்களின் அடிப்படையில் போலீசாரால் தேடப்பட்டு வருகிறார் நித்யானந்தா.
இந்நிலையில் ஈக்வடார் அருகே தனி தீவொன்றை விலைக்கு வாங்கி தனி நாடு அமைக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளார் நித்யானந்தா.
ஹிந்துக்களுக்காக ‘கைலாசா’ என்ற நாட்டை உருவாக்குவதாகவும், அது எல்லைகள் அற்ற ஹிந்து நாடாக இருக்கும் எனவும் நித்தியானந்தா தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தனது கனடா நாட்டு சீடரான சாரா லாண்ட்ரியிடம் தனிப்பட்ட முறையில் பேஸ்புக் மெசஞ்சரில் உரையாடிய நித்யானந்தா, வாடிகன் போல குட்டி நாட்டை அமைக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தனி நாடு அந்தஸ்து கோரி ஐக்கிய நாடுகள் அவையை நாடியுள்ளதாகவும் தகவல்கள் வெளியான நிலையில், இதற்கென்று தனி இணையதளமும் தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் வெளியான வீடியோவில், எனக்கு எதிராக சர்வதேச சதி நடத்தப்படுகிறது, இதற்காக பணமும் வாரி இரைக்கப்படுகிறது, இதில் நல்ல விடயம் என்னவென்றால் இதை அனைத்தும் ஆவணப்படுத்தப்படுகின்றன, இதனை சர்வதேச சமூகமும் கவனித்து வருகிறது.
என்ன நடந்தாலும் என்னை கடவுளே நேரடியாக பாதுகாத்து வருகிறார் என தெரிவித்துள்ளார்.
மேலும் நான் ஒரு புறம்போக்கு, பரதேசி என கூறிய நித்யானந்தா அதற்காக புது விளக்கத்தையும் கொடுத்துள்ளார்.
Leave a Reply