பரபரப்பை கிளப்பிய சுசி லீக்ஸ் காரணம் யார், தற்கொலை செய்தது ஏன்?- பாடகி சுசீத்ரா பரபரப்பு பேட்டி

கடந்த 2017ம் ஆண்டு தமிழ் சினிமா பிரபலங்களை உலுக்கிய ஒரு சம்பவம் சுசி லீக்ஸ். பாடகி சுசீத்ராவின் டுவிட்டர் பக்கத்தை யாரோ ஹாக் செய்து பிரபலங்களின் மோசமான புகைப்படங்களை ஷேர் செய்தனர்.

மிகவும் பரபரப்பாக இந்த சம்பவம் பேசப்பட சுசீத்ராவோ சொந்த பிரச்சனைகளால் மிகவும் சோகத்தில் இருந்துள்ளார். பிறகு இந்த சுசி லீக்ஸ் விவகாரத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறியிருந்தார்.

இப்போது பல பிரச்சனைகளை தாண்டி மன உளைச்சலில் இருந்த அவர் புதிய அவதாரம் எடுத்துள்ளார். வெளிநாட்டில் French சமையல் பற்றி படித்து நாடு திரும்பியுள்ள அவர் பாடகர் ரஞ்சித்துடன் இணைந்து ஒரு பாடலை உருவாக்கியுள்ளாராம்.

அண்மையில் ஒரு பேட்டியில், தனக்கும் அந்த சுசீ லீக்ஸ் விவகாரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதோடு நான் தற்கொலை முயற்சி செய்ததாக கூறினர், அதில் உண்மை இல்லை என பேசியுள்ளார்.


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *