
கடந்த வருடம் வெளியாகி வசூல் சாதனை படைத்த படம் ‘KGF’.
யாஷ் ஹீரோவாக நடிக்க ,ஸ்ரீநிதி ஷெட்டி அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.பிரசாந்த் நீல் இந்த படத்தை இயக்கி இருந்தார்.
தமிழ,தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி என பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இந்த படம் வெளியிடப்பட்டது.
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தின் ஃபெர்ஸ்ட்லுக் போஸ்டர் படத்தின் நாயகன் யாஷின் பிறந்தநாளான ஜனவரி 8ஆம் திகதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரங்களில் ஒன்றான அதிரா என்ற கதாபாத்திரத்தில் பிரபல பொலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார்.
இந்த படம் வரும் ஏப்ரல் 2020இல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply