
ஊசிகள், சவக்கிடங்கிலிருந்து வந்த மனித உடல் உறுப்புகள் உட்பட, பிரித்தானியாவிலிருந்து அனுப்பப்பட்ட குப்பைகள் அழுகி நாறும் நிலைக்கு வந்துள்ள நிலையில், அவற்றை உடனே திரும்பப் பெறுமாறு பிரித்தானியாவை இலங்கை வலியுறுத்தியுள்ளது.
பிரித்தானியாவிலிருந்து கண்டெய்னர்களில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட மெத்தைகள், பிளாஸ்டிக் கழிவுகளுடன் அழுகும் உடல் பாகங்களும் உள்ளன. அந்த கண்டெய்னர்களில் பல 2017இல் பிரித்தானியாவிலிருந்து வந்ததாக நம்பப்படுகிறது.
அவற்றிலிருந்து மோசமான நாற்றம் அடிப்பதையடுத்து, அவை கடந்த வாரம்தான் சோதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றில் சில முற்றிலும் அழுகிப்போனதால், அவை என்ன என்று கூட அடையாளம் காண முடியாத சூழல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன் தினம் அந்த 111 கண்டெய்னர்களையும் திருப்பி அனுப்ப உத்தரவிடுவதற்கு உடனடி நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால், நேற்று பிரித்தானியாவின் சுற்றுச்சூழல் ஏஜென்சி இலங்கையிலிருந்து முறைப்படி கோரிக்கை எதுவும் வரவில்லை என்று கூறியுள்ளது.
அந்த கழிவுகளை இலங்கை வர்த்தகர் ஒருவர்தான் இறக்குமதி செய்ததாக தெரிவித்துள்ள சுங்கத்துறை செய்தி தொடர்பாளர், அவற்றை மீண்டும் ஏற்றுமதி செய்வதும் அவரது பொறுப்புதான் என்று கூறியுள்ளார்.
Leave a Reply