
ஜெனீவா விமான நிலையத்தில் பயணிகளின் பொருட்களை திருடியதாக இரண்டு விமான நிலைய ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை, பயணிகளின் உடைமைகளை கவனித்துக்கொள்ளும் விமான நிலைய ஊழியர்களை விமான நிலைய பொலிசார், திடீரென முன்னறிவிப்பின்றி சோதனையிட்டனர்.
அப்போது பயணிகளின் உடைமைகளிலிருந்து திருடப்பட்ட பொருட்கள் சில, இரண்டு ஊழியர்களிடமிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
எங்கே கமெரா இல்லையோ, அந்த பகுதியில் வைத்து இந்த திருட்டை அவர்கள் செய்திருப்பதாக பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பாக விசாரணை ஒன்று துவக்கப்பட்டுள்ளது.
Leave a Reply