
பிரித்தானியாவில் உதவித்தொகை மூலம் கிடைக்கும் பணத்தில் வாழ்ந்து வந்த ஏழை பெண்ணுக்கு திடீர் அதிர்ஷ்டமாக கோடிக்கணக்கில் பணம் கிடைத்துள்ளது.
Seaham நகரை சேர்ந்தவர் அனிதா பேம்ப்பெல் (51). நான்கு குழந்தைகளுக்கு தாயான இவருக்கு முன்னர் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அதிலிருந்து மெல்ல மீண்டு வருகிறார்.
சரியான வருமானம் இல்லாமல் அவதிப்பட்டு வந்த அனிதாவுக்கு வேலையில்லாத நபர்கள், உடல்நலம் குன்றியோருக்கான உதவித்தொகை கிடைத்து வந்தது.
அதை வைத்தே அவர் தனது வாழ்க்கையை மிகுந்த சிரமத்துக்கு இடையில் நடத்தி வந்தார்.
இந்நிலையில் பிங்கோ என்ற விளையாட்டை ஓன்லைன் மூலம் அனிதா விளையாடிய நிலையில் அவருக்கு முதலில் £597,000 பரிசு கிடைத்தது.

பின்னர் அடுத்த பத்து நாட்களில் மீண்டும் பிங்கோவில் அவருக்கு £552,000 பரிசு கிடைத்துள்ளது.
பல சமயம் உணவுக்கு சிரமப்பட்ட அனிதா தற்போது கோடீஸ்வரியாக ஆனது அவரை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் பரிசு பணத்தை தனக்கு செலவழிக்காமல் தனது குடும்பத்தாருக்கு கொடுப்பதிலேயே அவர் மும்முரமாக இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அனிதா கூறுகையில், என்னால் இதை நம்பமுடியவில்லை, இவ்வளவு பெரிய பரிசுத்தொகை எனக்கு கிடைத்தது கனவு போலவே உள்ளது.

என்னுடைய 73 வயது தந்தை புதிய வீடு வாங்குவதற்காக பணத்தில் ஒரு பகுதியை அவருக்கு கொடுத்தேன்.
என் மகளுக்கு குழந்தை பிறப்பது தொடர்பான மருத்துவ சிகிச்சைக்கு பணம் தேவைப்படும் நிலையில் அதற்கு செலவழித்து வருகிறேன்.
என் பிள்ளைகளுக்கு பணத்தை செலவிட்டு அவர்களின் தேவைகள் மற்றும் ஆசைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே என் எண்ணம்.
நான் என்றுமே என் பிள்ளைகளுக்கு நல்ல தாயாகவே இருக்கிறேன், அதே சமயம் எனக்கு கிடைத்துள்ள இந்த பணத்தை வைத்து அவர்களுக்கு உதவுவது மகிழ்ச்சியாக உள்ளது என கூறியுள்ளார்.

Leave a Reply