
நிர்மாணப் பணிகளின் போது மண், கல், மணல் ஆகியவற்றை கொண்டுசெல்வதற்கான அனுமதி பெறுதலை இரத்துச் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கத்தின் இரண்டாவது அமைச்சரவை கூட்டம் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்றது.
இதன்போதே ஜனாதிபதியினால் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.
அத்துடன், நேற்றைய அமைச்சரவை கூட்டத்தின் போது பல முக்கிய விடயங்கள் குறித்து ஆராயப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply