
மதுபானம் மற்றும் சிகரட் வகைகளுக்கான விலைகள் குறைக்கப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பெறுமதி சேர் வரி எட்டு வீதத்தினால் குறைக்கப்பட்ட போதிலும் அது மதுபானம் மற்றும் புகையிலை உற்பத்தி பொருட்களின் விலைகளில் மாற்றத்தை ஏற்படுத்தாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறைக்கப்படும் பெறுமதி சேர் வரியானது மதுபான மற்றும் சிகரட் உற்பத்தி தொடர்பாக அறவீடு செய்யப்படும் உற்பத்தி வரியை அதிகரிப்பதன் மூலம் சமனிலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Leave a Reply