மருத்துவராக ஆசைப்பட்ட சிறுமி… வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் தவிப்பு: அதிர்ச்சி காரணம்

சீனாவில் சிறுமி ஒருவர் விசித்திர நோயால் 60 வயது தோற்றத்தில் இருப்பதாக அவரால் தற்போது வீட்டைவிட்டு வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

Xiao Feng என அறியப்படும் அந்த 15 வயது சிறுமி மரபணு கோளாறு காரணமாக தற்போது 60 வயது தோற்றத்தில் உள்ளார்.

இதனால் அவரது தோல் சுருக்கம் விழுந்து பொலிவிழந்து காணப்படுகிறது. இதன் காரணமாக அவர் தற்போது பாடசாலைக்கு செல்வதை விட்டுவிட்டதுடன்,

குடியிருப்பில் இருந்தே வெளியேவருவதையும் நிறுத்தியுள்ளார். பாடசாலையில் தமக்கு நண்பர்கள் எவரும் இல்லை என கூறும் அவர்,

எப்போதேனும் அவர்கள் உடன் இருந்தால், அவர்களின் பாட்டி போன்று தாம் தெரிவதாக அவர் கண்கலங்கியுள்ளார்.

பொதுமக்கள் என்னை தெருவில் மாமி என்று அழைக்கிறார்கள், என் வகுப்பு தோழர்கள் என்னை ஒரு விசித்திரம் என்று அழைக்கிறார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

தனக்கு தாமே புகைப்படம் எடுப்பதையும் விட்டுவிட்டதாக கூறும் அவர், சிரிப்பதையும் மறந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இதே நிலை, தமது மனைவிக்கும் இருந்தது என கூறும் அந்த சிறுமியின் தந்தை, ஆனால் ஏற்கெனவே இதுபோன்று நிகழும் என தெரியும் என்பதால் மருத்துவர்களை இதுவரை நாடவில்லை என தெரிவித்துள்ளார்.

கல்வியறிவற்ற தங்களுக்கு மரபணு கோளாறு உள்ளிட்ட எதையும் தெரியாது என கூறும் அவர், Xiao Feng பிறந்த பிறகு வருந்தி எந்த பயனும் இல்லை என தெரியும் என்றார்.

இருப்பினும், சிறுமி Xiao Feng தமது மருத்துவ சிகிச்சைக்காக பணம் திரட்டும் நோக்கில் உள்ளார். மருத்துவராக வேண்டும், சாதாரண பெண்கள் போன்று வாழ வேண்டும் உள்ளிட்ட ஆசைகளை கடிதமாக எழுதி, சீனாவில் பொதுநலத் தொண்டாற்றிவரும் Guo Mingyi என்பவரிடம் உதவி கேட்டு அனுப்பியுள்ளார்.

சிறுமியின் கடிதத்தால் ஈர்க்கப்பட்ட Guo Mingyi தற்போது தாமே முன்வந்து நிதி திரட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *