
நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி முதலாம் தவணை கற்றல் செயற்பாடுகளுக்காக பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன.
இந்தநிலையில் அன்றைய தினமே மாணவர்களுக்கான பாடநூல்களை வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளதாகக் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
மூன்றாம் தவணைக்கான விடுமுறை வழங்கப்படும்போதே பாடநூல்களை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும், சில நூல்கள் குறைபாடுகளாக இருந்தமையால், அடுத்துவரும் பாடசாலை முதல் நாளிலிலேயே அதனை வழங்கத் தீர்மானித்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கிணங்க எதிர்வரும் 02ஆம் திகதி பாடநூல்கள் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான பணிப்புரைகள் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அதிபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
Leave a Reply