
மக்களுக்குச் சலுகைகளை வழங்குவதற்காக ஜனாதிபதியினால் எடுக்கப்பட்டுள்ள முடிவுகளின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டத்திருத்தங்கள் வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளன.
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஆரம்பமாகுவதற்கு இரண்டு வாரத்திற்கு முன்னர் இவற்றை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த குறித்த கலந்துரையாடலின் போது இந்திய விஜயம் தொடர்பான அறிக்கை ஒன்றினை ஜனாதிபதி முன்வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாகவும் இதன்போது அதிகளவில் அவதானம் செலுத்தப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.
குறித்த கலந்துரையாடலில், ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Leave a Reply