
நைஜீரியா அருகே பயணித்த ஹாங்காங் நாட்டு கப்பலில் இருந்து 18 இந்தியர்கள் கடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹொங்கொங் நாட்டை சேர்ந்த எம்.டி. நேவ் கன்ஸ்டெல்லேசன் என்ற எண்ணெய் கப்பல் நைஜீரியா நாட்டின் போனி கடற்பகுதியில் பயணித்த நிலையில், குறித்த 18 பேரையும் கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கப்பலில் 26 பேர் பயணம் செய்துள்ளதுடன், இவர்களுள் 18 பேர் இந்தியர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து நைஜீரிய நாட்டில் அமைந்துள்ள இந்திய தூதரகத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Leave a Reply