
அம்பாறை- கல்முனை பிராந்தியத்தில் திடீர் சோதனை நடவடிக்கையில் அம்மாவட்ட விசேட போக்குவரத்து பொலிஸார் ஈடுபட்டிருந்தனர்.
இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை முதல் மதியம் வரை சோதனை நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டிருந்தனர்.
கல்முனை சுற்றுவட்டம், நற்பிட்டிமுனை பிரதான சந்தி, தாளவட்டுவான் சந்தி, பாண்டிருப்பு ஆகிய இடங்களிலேயே குறித்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இந்த திடீர் சோதனை நடவடிக்கையானது அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜி.எச்.மாரப்பன வழிகாட்டலில் இடம்பெற்றதுடன் இதன்போது விழிப்பூட்டல் செயற்பாடுகள் மற்றும் இளைஞர்கள், சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது, தலைக்கவசம் அணியாமை, ஒரு மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணிப்பது, அதிவேகமாக செல்வது தொடர்பாக போக்குவரத்து பொலிஸாரினால் விளக்கமளிக்கப்பட்டது.
மேலும் போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகளுக்கு சாரதி அனுமதி பத்திரங்கள் இருந்தும் வீதி போக்குவரத்து ஒழுங்கு முறை தொடர்பாக போதிய அறிவின்மை காணப்படுவதாக கூறியுள்ள போக்குவரத்து பொலிஸார், அதிகமான சாரதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
Leave a Reply