
நீர் கட்டணத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
15 யுனீட்டுக்கு அதிகமாக நீரை பாவிப்பவர்களுக்கான கட்டணமே இவ்வாறு அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாதமொன்றிற்கு 15 யுனீட்டுக்கு குறைவாக பாவிப்பவர்களுக்கு நீர் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்டத்திற்கமைய 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீர் கட்டணத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு கடந்த 6 வருடங்களாக நீர் கட்டணத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படவில்லை எனவும் இராஜாங்க அமைச்சர் வாசு தேவநாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பொது இடங்கள், தொழில் புரியும் இடங்கள், வைத்தியசாலைகள் மற்றும் பாடசாலை உள்ளிட்ட இடங்களில் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது எனவும் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
Leave a Reply