
ராஜஸ்தான் மாநிலத்தில், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 5வயது சிறுவனை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
சிரோகி பகுதியின் சிபோகான் கிராமத்தைச் சேர்ந்த 5வயது சிறுவன், விளையாடி கொண்டிருந்தபோது ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான்
15அடி ஆழத்தில் சிக்கிய சிறுவனை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. சிறுவனுக்கு தேவையான தண்ணீரும் மருந்தும் அளிக்கப்பட்ட நிலையில், 8மணி நேர போராட்டத்திற்கு பின் சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான்.
அவனுக்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின் மருத்துவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு சென்றனர்.
சிறுவன் மீட்கப்பட்ட காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
Leave a Reply