
வவுனியா- மன்னார் பிரதான வீதியிலுள்ள வேப்பங்குளம் வீதியோரத்தில் இருந்த பெரும் மரமொன்று முறிந்து வீழ்ந்தமையினால் போக்குவரத்து பல மணி நேரம் பாதிப்படைந்திருந்ததாக தெரிவித்துள்ளனர்.
இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போக்குவரத்து 3 மணித்தியாலயமாக பாதிப்படைந்திருந்த நிலையில் பொலிஸார், பொதுமக்கள் மற்றும் பயணிகளின் ஒத்துழைப்புடன் வீதியின் போக்குவரத்துக்கு இடையூறாகவிருந்த மரத்தினை வெட்டி, அவ்விடத்திலிருந்து அகற்றி போக்குவரத்தை சீர்செய்துள்ளனர்.
அத்துடன் தற்போது நிலவிவரும் காலநிலையால், பல்வேறு இடங்களிலுள்ள மரங்கள் முறிந்து வீழ்ந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதோடு வீதியோர மரங்கள் சரிந்து விழக்கூடிய அபாயம் இருப்பதனால் பயணிகள் அவதானத்துடன் பயணத்தை மேற்கொள்ளுமாறும் பொலிஸார் கேட்டுள்ளனர்.

Leave a Reply