
நேபாளத்தின் காத்மாண்டு விமான நிலையத்தில் தங்கம் கடத்தியதாக கூறி சீனத்து இளைஞரை அங்குள்ள பொலிசார் கைது செய்துள்ளனர்.
காத்மாண்டு விமான நிலையத்தில் சீனத்து இளைஞர் ஒருவர் தத்தளிப்பது போன்று பாதுகாப்பு அதிகாரிகளின் பார்வையில் பட்டுள்ளது.
இதனையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் அந்த 22 வயது இளைஞரை அழைத்து விசாரித்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அவரது மலக்குடலில் சுமார் 36,100 பவுண்டுகள் மதிப்பிலான தங்கத்தை ஆணுறை ஒன்றில் மடித்து மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
தற்போது தங்கம் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அந்த இளைஞர் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

மருத்துவரின் உதவியுடன் குறித்த தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். காத்மண்டு விமான நிலையத்தில் சமீப நாட்களாக தங்கம் கடத்துவது அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சீன பயணிகள் இருவர் 8 கிலோ அளவுக்கு தங்கம் கடத்தி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்,
கடந்த மாத துவக்கத்தில் ரஷ்ய பெண்மணி ஒருவர் சுமார் 61,200 பவுண்டுகள் மதிப்பிலான தங்கம் கடத்த முயன்றதும் அம்பலமானது.
Leave a Reply